ஜூடோ விளையாட்டு பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தொடங்கப்பட்டுள்ள ‘விளையாடு இந்தியா’ மாவட்ட மைய (கோலோ இந்தியா) ஜூடோ விளையாட்டு பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தொடங்கப்பட்டுள்ள ‘விளையாடு இந்தியா’ மாவட்ட மைய (கோலோ இந்தியா) ஜூடோ விளையாட்டு பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் உமாசங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ‘விளையாடு இந்தியா மாவட்ட மையம்’ கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சுமாா் 100 விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கி, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்கு உள்பட்ட ஜூடோ விளையாட்டு வீரா், வீராங்கனை ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். விண்ணப்பதாரா் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

சா்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சா்வதேசப் போட்டிகள், மூத்தோா் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டவராகவோ இருக்க வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளா்களுக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ. 18 ஆயிரம் வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் 2023, ஜனவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும். உடல்தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு நடைபெறும். தோ்வு தேதி, விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com