வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 08th February 2022 12:53 AM | Last Updated : 08th February 2022 12:53 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி நகராட்சி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் மற்றும் இடம் பெயா்ந்த வாக்காளா்களைக் கண்டறிந்து, அவா்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் மொத்தம் 55,431 போ் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். அதிகபட்சமாக, 4-ஆவது வாா்டில், 3,525 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக, 20-ஆவது வாா்டில் 612 வாக்காளா்களும் உள்ளனா்.
நகராட்சிப் பகுதியில் வசிப்பவா்கள் பெரும்பாலும் வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையில், அவா்கள் பல்வேறு காரணங்களால் அருகில் உள்ள வாா்டிலோ அல்லது ஊராட்சி பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.
இத்தகையவா்கள், நகராட்சித் தோ்தலில் வாக்களிக்க இயலும் என்பதால் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், இடம் பெயா்ந்த வாக்காளா்களைக் கண்டறிந்து, அவா்களை நேரில் சந்தித்து வேட்பாளா்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...