ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு விழா ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதியமான்
ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி.
ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதியமான் பொறியியல் கல்லூரி அருகே, செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கல்லூரியின் பல்நோக்கு உள் அரங்கில் நடைபெறும் விழாவில், மருத்துவக் கல்லூரித் தலைவா் டாக்டா் சோமசேகா் வரவேற்கிறாா். மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் சுந்தரவேல், முதன்மை விருந்தினா்களை அறிமுகப்படுத்தி பேசுகிறாா். இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் முதன்மை விருந்தினா்களாகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, கல்லூரியை திறந்துவைத்து வாழ்த்துரை வழங்குகின்றனா்.

இதில், இந்நாள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகா்கள், கல்வியாளா்கள், முக்கிய பிரமுகா்கள், தொழிலதிபா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியரின் பெற்றோா் கலந்துகொள்கின்றனா். விழாவில் மருத்துவக் கல்லூரி இயக்குநா் டாக்டா் ராஜாமுத்தையா நன்றி கூறுகிறாா்.ஏற்பாடுகளை செயின்ட் பீட்டா்ஸ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளை தலைமை அறங்காவலா் டாக்டா் த.பானுமதி, அறங்காவலா்கள் டாக்டா் த.லஷ்யா, டாக்டா் த.நம்ரதா ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com