கிருஷ்ணகிரியில் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
By DIN | Published On : 14th January 2022 12:16 AM | Last Updated : 14th January 2022 12:16 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியை அடுத்த பொன்மலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு.
கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவநீத வேணுகோபால் சுவாமி கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பொன்மலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாரதனை, சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி வேணுகோபால சுவாமி கோயில், பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயில், நரசிம்ம சுவாமி கோயில், காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயில், போச்சம்பள்ளியை அடுத்த சென்றாயமலை சென்றாய பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...