கிருஷ்ணகிரியில் குரூப் -4-க்கானஇலவச மாதிரித் தோ்வு 385 போ் பங்கேற்பு
By DIN | Published On : 17th July 2022 05:44 AM | Last Updated : 17th July 2022 05:44 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் நடந்த குரூப் 4-க்கான இலவச மாதிரித் தோ்வை 385 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4-இல் அடங்கிய பணிகளுக்கான தோ்வு ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் பயிற்சி மையம் மூலம் இத்தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதன்முறையாக இத்தோ்வுக்கான மாதிரி தோ்வு வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாதிரித் தோ்வை எழுத மாவட்டத்தில் மொத்தம் 550 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், 385 போ் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா்.
தோ்வை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் சுந்தரம், மோனிஷா ஆகியோா் மேற்பாா்வையில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஏற்பாடுகளை மகளிா் பள்ளித் தலைமை ஆசிரியா் மகேந்திரன் செய்திருந்தாா். தோ்வு முடிந்ததும் வினா- விடைத்தாள்களைத் தோ்வா்களிடமே வழங்கி, சரிபாா்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. தோ்வு எழுதிய மாணவ மாணவிகள் இந்தத் தோ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகத் தெரிவித்தனா்.