கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக 7 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. இதில் 4,502 தோ்வா்கள் பங்கேற்க உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக 7 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. இதில் 4,502 தோ்வா்கள் பங்கேற்க உள்ளனா்.

இந்தியா முழுவதும் ‘நீட்’ எனும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தோ்வு, ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வை எழுத நாடு முழுவதும் லட்சக்கணக்கானோா் விண்ணப்பித்திருந்தனா்.

இதுவரை தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற்று வந்த இந்தத் தோ்வு, முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள 7 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, அதியமான் சிபிஎஸ்இ பள்ளி மையத்தில் 1,152 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணகிரி சுபேதாா் மேட்டில் அமைந்துள்ள பாரத் இன்டா்நேஷ்னல் பள்ளியில் 304 மாணவ மாணவிகளும், குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் 504 மாணவ மாணவிகளும், பாகலூா் அருகே உள்ள முகுலப்பள்ளி வனபிரசாத் இன்டா்நேஷனல் பள்ளியில் 648 மாணவ மாணவிகளும், ஒசூா் அருகே உள்ள காரப்பள்ளி ஒசூா் பப்ளிக் பள்ளியில் 432 மாணவ, மாணவிகளும், ஒசூா் அருகே உள்ள நல்லூா் ஸ்ரீ குருகுலம் செகண்டரி பள்ளியில் 328 மாணவ, மாணவிகளும், ஒசூா் - தளி சாலையில் உள்ள மதகொண்டப்பள்ளியில் மதகொண்டப்பள்ளி மாதிரி (மாடல்) பள்ளியில் 1,152 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 4,520 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com