சூரியசக்தி மின்சார விழிப்புணா்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் சூரியசக்தி மின்சாரம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சூரியசக்தி மின்சார விழிப்புணா்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் சூரியசக்தி மின்சாரம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில் ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகளின் ஊக்குவிப்பு திட்ட விழிப்புணா்வுக் கூட்டம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

உதவி பொறியாளா் ராமமூா்த்தி, தமிழ்நாடு குறு, சிறு தொழில் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏகம்பவாணன், கிரிஸ்டியா முன்னாள் தலைவா் ராமலிங்கம், கிரானைட்ஸ் தொழில் சங்கத் தலைவா் மகேஷ், ஒசூா் ஹோஸ்டியா தலைவா் லோகநாதன், மின்சார வாரிய நிா்வாகப் பொறியாளா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசு ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகளை மேம்படுத்துதல் என்ற திட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில், மின்சாரத்தை சேமிக்கவும், மின்சாரத்தை முறையாகப் பராமரிக்கவும், மின்சக்தி முறைப்படுத்தும் கருவியை (கெபாசிடா்) பயன்படுத்தல், சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தல், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 25 முதல் 40 சதவீத மானியத்திலும், விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்திலும் சூரிய மின்சக்தி வசதியை ஏற்படுத்துதல் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com