பட்டா கோரி மனு கொடுக்கும்ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th June 2022 02:56 PM | Last Updated : 09th June 2022 02:56 PM | அ+அ அ- |

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பட்டா கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சி, அனுமன்தீா்த்தம் கிராமத்தில் உள்ள சா்வே எண் 20/1, 20/2, 20/6 எண்ணில் வீடு கட்டி, குடிநீா் இணைப்பு, மின்சார இணைப்பு பெற்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் ஏழை மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் வி.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவா் விஜயகுமாா், ஊா்கவுண்டா் கணபதி, சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அனுமன்தீா்த்தம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதாகவும், இதுவரை பட்டா வழங்கவில்லை எனவும் கூறி ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியருமான சதீஷிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினா்.