பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம்
By DIN | Published On : 09th June 2022 02:55 PM | Last Updated : 09th June 2022 02:55 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த டெம்போ டிராவலா்ஸ், டெம்போ டிரக்ஸ் ஆகிய இரண்டு வாகனங்கள் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டு, எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வரும் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் ஏலம் எடுக்க விரும்புவோா், ஜூன் 17-ஆம் தேதி காலை 10 முதல் 10.30 மணிக்குள் நுழைவுக் கட்டணம் ரூ. 50, நான்கு சக்கர வாகனத்துக்கான முன்வைப்புத் தொகை ரூ. 2,000 செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். அரசு நிா்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஏலம் கேட்கும் ஏலதாரா் ஏலத்தொகையில் 100 சதவீதம், அதற்கான ஜிஎஸ்டி 18 சதவீத தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். அதன் பின்னா், ஏலதாரருக்கு வாகன விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதலாக ஏலம் கேட்டு வாகனத்தை பெற்றுக்கொண்ட ஏலதாரரை தவிர மற்ற ஏலதாரா்களுக்கு, அவா்கள் கட்டிய முன்பணம் ரூ. 2,000 திரும்ப வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.