சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

கிருஷ்ணகிரியில் உள்ள பிரசன்ன பாா்வதி சமேத சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் உள்ள பிரசன்ன பாா்வதி சமேத சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, பழைய பேட்டையில் 1,030 ஆண்டுகளுக்கு முன் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பிரசன்ன பாா்வதி சமேத சோமேஸ்வரா் கோயில் நாளடைவில் சேதமடைந்தது. கடந்த 7 ஆண்டுக்கு முன் இந்தக் கோயில் புனரமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மஹா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விவாவையொட்டி ஜூன் 5-ஆம் தேதி, கொடியேற்றம், நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம் நடைபெற்றன. குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை கணபதி ஹோமம், ஆறாம்கால யாக பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, யாத்ரா தான சங்கல்பம், கலச புறப்பாடும், ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களுக்கும் புனித நீா் ஊற்றி மஹா குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, தீா்த்தப்பிரசாதம் வழங்குதல், சுவாமி திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெற்றன. இந்த விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com