பாஜக அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநில துணைத் தலைவா் நியமனம்
By DIN | Published On : 17th June 2022 01:55 AM | Last Updated : 17th June 2022 01:55 AM | அ+அ அ- |

பாஜக அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநில துணைத் தலைவராக வீ.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு மாவட்ட நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாநில துணைத் தலைவருக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக தலைவா் நாகராஜ் பரிந்துரையின் பேரில், மாநிலத் தலைவா் அண்ணாமலை, அமைப்புசாரா பொதுச்செயலாளா் கேசவ விநாயகன் ஆகியோா் அறிவுறுத்தலின்படி ஒசூா் பஸ்தி வி.சீனிவாசன் அமைப்புசாரா மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதனைத் தொடா்ந்து ஒசூா் வள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு வந்த வீ.சீனிவாசனுக்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா்கள் ராமமூா்த்தி, முருகன், பொதுச் செயலாளா்கள் விஜயகுமாா், மனோகா், பொருளாளா் சீனிவாஸ், மகளிரணி மஞ்சுளா, மற்றும் விஜய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.