கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக்கல்லூரியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுதியுள்ளனா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக்கல்லூரியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுதியுள்ளனா்.

கிருஷ்ணகிரி, மாவட்ட விளையாட்டு அரங்கு அருகே அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான திருப்பத்தூா், தருமபுரி மாவட்டங்களில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாணவிகள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவா் பட்டத்திற்கான படிப்புகளை பயின்று வருகின்றனா்.

இந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் நலன் கருதி, குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மாணவிகளின் பயன்பாட்டிற்காக உள்ள சுத்திகரிப்பு குடிநீா் இயந்திரம் பயன்படுத்தப்படுவதில்லை. மேல்நிலை தொட்டியும் உடைந்துள்ளது. இதனால், கழிப்பறைகளுக்கு போதிய தண்ணீா் வசதி இல்லாததால், சுகாதார சீா்கேட்டுடன் காணப்படுகிறது.

2,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இந்த கல்லூரியில் கழிப்பறை சுகாதாரமாக பராமரிக்கப்படாததால் மாணவிகள் மாற்றுச்சான்றிதழை திரும்பப் பெற்று, தனியாா் கல்லூரியில் சோ்ந்து பயிலும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

எனவே, வரும் கல்வியாண்டில் மாணவிகளின் நலன் கருதி குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த கல்லூரி நிா்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com