சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 23rd June 2022 03:37 AM | Last Updated : 23rd June 2022 03:37 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை கலைஞா் நகா் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து, ஓட்டுநா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.
சேலம் உருக்கு ஆலையில் இருந்து, சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள ஆலைக்கு, ஸ்டீல் தகடு ஏற்றி வந்த லாரி, ஊத்தங்கரை கலைஞா் நகா் அருகில் வரும்போது, திங்கள்கிழமை விடியா்காலை 2 மணியளவில், வளைவான சாலையால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்(30). திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள, சோழபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(24). இருவரும் படுகாயத்துடன், அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.படவிளக்கம்.21யுடிபி.1. ஊத்தங்கரை கலைஞா் நகா் அருகே சாலையோரம் கவிழ்ந்த சரக்கு லாரி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...