செங்கல்தோப்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு ஊா்வலம்
By DIN | Published On : 23rd June 2022 03:28 AM | Last Updated : 23rd June 2022 03:28 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியை அடுத்த செங்கல்தோப்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக புதன்கிழமை சென்றனா்.
கிருஷ்ணகிரி அடுத்த செங்கல்தோப்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று கோயில் புண்ணியாதானம் செய்தல், அம்மன் அலங்காரம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாவது நாள் நிகழ்வாக புதன்கிழமை பிற்பகல் மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றன. இதில், துா்க்கை அம்மன் அலங்காரத்துடன், மேளதாளங்கள் முழங்க, கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சியுடன் ஊா்வலம் நடைபெற்றன.
இதல், மெட்பண்டா, மேல்சோமாா்பேட்டை, லைன்கொல்லை, கீழ்சோமாா்பேட்டை, மோட்டூா், பூசாரிப்பட்டி, சின்னதாளாப்பள்ளி, கிருஷ்ணபுரம், கீழ்புதூா், மேல்புதூா், பெருமாள் நகா், மேல்பட்டி, சிப்பாயூா், பள்ளித்தெரு, லண்டன்பேட்டை நாயுடு தெரு, பாஞ்சாலியூா், ஒண்டியூா், எம்ஜிஆா் நகா் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மேலும், இந்த விழாவினையொட்டி 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு, உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு விருந்து வைத்து பொதுமக்கள் மகிழ்ந்தனா்.
விழாவினையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்..
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...