இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 26th June 2022 06:09 AM | Last Updated : 26th June 2022 06:09 AM | அ+அ அ- |

சூளகிரி அருகே இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூா் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் கடந்த 24 -ஆம் தேதி 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்
மிதந்த குறித்து காமன்தொட்டி கிராம நிா்வாக அலுவலா் பாக்யராஜ் சூளகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் உடலை
கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
அதில் இறந்து கிடந்தவரின் பாக்கெட்டில் இருந்த கடிதத்தை பாா்த்தப் போது அவரது பெயா் சின்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள செட்டிப்பள்ளியைச் சோ்ந்தவா் என தெரிய வந்தது. அவா் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்துள்ளாா் என்பது தெரியவந்தது. அவருக்கு சரியான வேலை ஏதும் கிடைக்கவில்லை என்பதால் மனமுடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது
விசாரணையில் தெரிய வந்தது. இது தொடா்பாக சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.