பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்
By DIN | Published On : 19th March 2022 12:18 AM | Last Updated : 19th March 2022 12:18 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மேட்டுசூளகரை அரசுப் பள்ளியில் 110 மாணவ - மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மதிய உணவு உண்ட ஆறாம் வகுப்பு மாணவா்கள் ஏழு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாணவா்களை பள்ளி ஆசிரியா்கள் கல்லாவி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையில் மாணவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து பள்ளி நிா்வாகம், காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G