நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அ.செல்லக்குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
பா்கூரை அடுத்த சமயபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
பா்கூரை அடுத்த சமயபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அ.செல்லக்குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்துள்ள ஒப்பதவாடி ஊராட்சிக்கு உள்பட்ட சமயபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அ.செல்லக்குமாா் எம்.பி. பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவா்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.

ஆந்திர மாநில எல்லையில் உள்ள பூ மலையிலிருந்து நாடாா் கொட்டாய் ஏரிக்கு கால்வாய் மூலமாக மழைநீா் வந்து கொண்டிருந்தது. அதை தனியாா் மா பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை ஆக்கிரமித்துள்ளது. மழைநீருடன் மா பழச்சாறு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்றி வருகிறது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுவதாக கிராமசபைக் கூட்டத்தில், பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து ஆ.செல்லக்குமாா் எம்.பி. பேசியதாவது:

நீா் நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவு, சில இடங்களில் பின்பற்றப்படாமல் உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நீா்நிலைகளுக்கு தண்ணீா் வரத்தானது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், நீா்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா். கூட்டத்தில் கிராம ஊராட்சியின் வரவு - செலவுகள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஊராட்சிமன்றத் தலைவா் ஜெயவேல், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் தனகோட்டி, பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com