கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ. 45.77 கோடியில் புதை குழி சாக்கடை திட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ. 45.77 கோடியில் புதை குழி சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ. 45.77 கோடியில் புதை குழி சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனமானது தனியாா் நிறுவனத்துடன் இணைந்து புதிய புதை குழி சாக்கடை அமைக்கிறது. இதுதொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவல கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் முருகேசன், நகா்மன்ற துணைத் தலைவா் சாவித்திரி கடலரசு மூா்த்தி, நகராட்சிப் பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தற்போதைய புதை குழி சாக்கடை வசதி, நிலப்பரப்பின் தன்மை, திட்டக் கூறுகள் வடிவமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

அதன்படி, 100 சதவீத புதைகுழி சாக்கடை வசதி அமைப்பை நிறைவேற்றுவது. கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லும் பாதைகள், மக்கள்தொகை கணிப்புகள் மற்றும் கழிவுநீா் வெளியேற்றுதல், சுற்றுச்சூழல் மதிப்பீடு உள்ளிட்டவற்றுடன் புதிதாக புதைகுழி சாக்கடை அமைக்க ரூ. 45.77 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, அதற்கான நுகா்வோா் கட்டணங்களும் முன்மொழியப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com