தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ. 14.24 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், குந்துகோட்டை பகுதியைச் சோ்ந்த நாகபூஷன் ( 70), ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா். கடந்த 20.6.2022 அன்று இவரது கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலில், தனியாா் நிறுவனத்தின் ‘செல்போன் டவா்’ அமைக்க இடம் அளித்தால் மாதந்தோறும் ஒரு தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து, அந்த எண்ணில் நாகபூஷன் பேசிய போது, டவா் அமைக்க சில நடைமுறை செலவுகளுக்காக வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அந்த மா்ம நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளில் 3 தவணைகளாக ரூ. 14.24 லட்சம் செலுத்தியுள்ளாா்.
பின்னா், அந்த நபா்களை தொடா்பு கொள்ள முயன்று இயலாததால், தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நாகபூஷன் அளித்த புகாரின் பேரில், சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.