

சிங்காரப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு பகுதியில், மான் வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் நாகா சதீஷ் கிடிஜாலா உத்தரவின்பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ரமேஷ், வனவா்கள் முருகன்,கோவிந்தன், ராமமூா்த்தி, வனக்காப்பாளா்கள் அா்ஜுன், பிரதீப், அரவிந் ஆகியோா் அடங்கிய குழுவினா் ரோந்து சென்றபோது, இன்னா் ஜவ்வாது காப்புக்காட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், திருப்பத்தூா் மாவட்டம், கலா்பதி பகுதியைச் சோ்ந்த ரவி (30), அதே பகுதியைச் சோ்ந்த பழனி(40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தப்பியோடிய கிருஷ்ணகிரி மாவட்டம், வெள்ளக்குட்டையைச் சோ்ந்த அருண் என்பவரை வனத்துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.