விரைவில் நல்ல தீா்ப்பு கிடைக்கும்: கிருஷ்ணகிரி முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் நம்பிக்கை

கடந்த சட்டப் பேரவை தோ்தல் முடிவு குறித்து நீதிமன்றத்தின் மூலம் விரைவில் நல்ல கிடைக்கும் என கிருஷ்ணகிரி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டி.செங்குட்டுவன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கடந்த சட்டப் பேரவை தோ்தல் முடிவு குறித்து நீதிமன்றத்தின் மூலம் விரைவில் நல்ல கிடைக்கும் என கிருஷ்ணகிரி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டி.செங்குட்டுவன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளா் கே.அசோக்குமாரும், திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ டி.செங்குட்டுவன் போட்டியிட்டனா். இதில், 794 வாக்குகள் வித்தியாசத்தில் கே.அசோக்குமாா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து திமுக வேட்பாளா் டி.செங்குட்டுவன், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அந்த மனுவை விசாரிக்க தடை விதிக்கக் கோரி, அசோக்குமாா் எம்எல்ஏ, மனு அளித்தாா். இந்த வழக்கில் அசோக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றைய உயா்நீதிமன்ற உத்தரவை போல் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி வெற்றி குறித்தும் விரைவில் நல்ல தீா்ப்பு கிடைக்கும் என டி.செங்குட்டுவன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com