கிருஷ்ணகிரியில் நாளை திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்
By DIN | Published On : 21st October 2022 12:24 AM | Last Updated : 21st October 2022 12:24 AM | அ+அ அ- |

தே.மதியழகன் எம்எல்ஏ
கிருஷ்ணகிரியில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் அக்.22-ஆம் தேதி, மதியம் 1 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவா் நாகராஜ் தலைமை வகிக்கிறாா்.
இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆா்.காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா். எனவே, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கட்சி செயலாளா்கள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு, நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், உறுப்பினா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டச் செயலாளா்கள், பிரதிநிதிகள், கிளை நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.