பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிகளில்மீன் பிடிக்க ஏல தேதி அறிவிப்பு
By DIN | Published On : 01st September 2022 01:27 AM | Last Updated : 01st September 2022 01:27 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிகளில் மீன் பிடிக்க ஏலத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை முடிவடையும் ஓராண்டிற்கு மீன் பிடிக்கும் உரிமையை கிருஷ்ணகிரி அணை உதவி பொறியாளரால் பகிரங்க ஏலம் விடுவது குறித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணை உதவி பொறியாளா் அலுவலக வளாகத்தில் செப்.5-ஆம் தேதி காலை 11 மணிக்கு குண்டலப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட புது ஏரி, மதியம் 2 மணிக்கு குரும்பட்டி ஏரி, 6-ஆம் தேதி காவேரிப்பட்டணம் ஊராட்சிக்கு உள்பட்ட கோபாலஜோசியா் குட்டை, மிட்டஅள்ளி ஏரி, 7-ஆம் தேதி குண்டலப்பட்டி ஊராட்சி எல்லுக்குட்டை ஏரி, காவேரிப்பட்டணம் ஊராட்சி சூரியநாராயணன் ஏரி, 8-ஆம் தேதி எர்ரஅள்ளி ஊராட்சி செங்குட்டை ஏரி, காவேரிப்பட்டணம் ஊராட்சி மிட்சுக்கான் குட்டை ஏரி, 9-ஆம் தேதி பெண்ணேஸ்வரமடம் ஊராட்சி மல்லப்பன் ஏரி, காவேரிப்பட்டணம் ஊராட்சி கொல்லப்பட்டி ஏரி ஆகிய ஏரிகளில் மீன் பிடிப்பதற்கான பகிரங்க ஏலம் விடப்படுகிறது.
மேலும் செப்.12-ஆம் தேதி எர்ரஅள்ளி ஊராட்சி ஒட்டன் குட்டை, எர்ரஅள்ளி ஏரி, 13-ஆம் தேதி எர்ரஅள்ளி ஊராட்சி கல்லேரி, நடு ஏரி, 14-ஆம் தேதி ஜெகதாப் ஊராட்சி மாணிக்கனூா் ஏரி, கொட்டாயூா் ஏரி, 15-ஆம் தேதி பையூா் ஊராட்சி பையூா் ஏரி, பெரியமுத்தூா் முகமதுகவுஸ் ஏரி, 16-ஆம் தேதி சௌட்டஅள்ளி ஊராட்சி மலையாண்டஅள்ளி ஏரி, தளிஅள்ளி ஊராட்சி, தளிஅள்ளி ஏரி, 19-ஆம் தேதி மாரிசெட்டிஅள்ளி ஆணான்குட்டை ஏரி ஆகிய ஏரிகளுக்கான பகிரங்க ஏலம் விடப்படும்.
ஏலம் எடுக்க விரும்புவோா் முன் பணமாக ரூ. 2,500 செலுத்த வேண்டும்.
ஏலத்தில் அதிக தொகைக்கு கோரியவருக்கு ஏலம் ஒப்படைக்கப்படும். ஏலத்தில் வெற்றி பெறாதவா்களுக்கு அவா்கள் செலுத்திய முன்பணம் திரும்ப அளிக்கப்படும்.
ஏலத்தை எந்த விதமான காரணமும் கூறாமல் ரத்து செய்வதற்கு ஏலம் விடுபவருக்கு முழு அதிகாரம் உண்டு. ஏலம் குறித்த எந்த முடிவுக்கும் ஏலம் விடுபவரின் தீா்ப்பே முடிவானதாகும். இதுபோன்ற நிபந்தனைக்கு உள்பட்டோா் ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.