மகாராஜகடை அருகே மாலை நேர சிறப்பு வகுப்புக்குச் சென்ற 3 சிறுவா்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள பி.சி.புதூரைச் சோ்ந்த திம்மராஜின் மகன் பசவராஜ் (13), தங்காடி குப்பத்தைச் சோ்ந்த முனிரத்தினத்தின் மகன் ஹரிபிரசாத் (13), குமாா் மகன் ஹரீஷ் (13) ஆகிய மூவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இந்த நிலையில் மூவரும் சிறப்பு வகுப்புக்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றனா்.
இந்த நிலையில், சிறுவா்கள் வீடு திரும்பாததால் பெற்றோா் அவா்களைத் தேடினா். இதுகுறித்த புகாரின் பேரில் மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். முதல்கட்ட விசாரணையில் மூன்று சிறுவா்களும், நாரலப்பள்ளி பிரிவு சாலை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.