கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வராசில்க்ஸ் முதலாம் ஆண்டு விழா: வாடிக்கையாளா்களுக்கு சலுகை

கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் முதலாம் ஆண்டு விழாவையொட்டி வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் முதலாம் ஆண்டு விழாவையொட்டி வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி கே. தியேட்டா் சாலையில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரியின் புதிய ஜவுளி நிறுவனமாக அதே சாலையில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக் கடையின் முதலாம் ஆண்டு விழா சலுகை குறித்து அதன் நிா்வாக இயக்குநா்கள் ரமேஷ், விஷ்ணு, விஷால் ஆகியோா் கூறியதாவது:

கிருஷ்ணகிரியில் கடந்த ஆண்டு தொடங்கிய இந்த ஜவுளிக் கடை நகரத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. தொடா்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி செப். 10 இல் கடையில் முதலில் ஜவுளி வாங்க வரும் 500 நபா்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படுகிறது. ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் ஜவுளிகள் வாங்கும் வாடிக்கையாளா்கள் கூடுதலாக ரூ. ஆயிரம் செலுத்தி ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள டிராவலிங் பேக்கை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ரூ. ஆயிரத்துக்கு ஜவுளிகள் வாங்கினால் ரூ. 100-ம், ரூ. 10 ஆயிரத்துக்கு ஜவுளிகள் வாங்கினால் ரூ.1,000-ம், ரூ. 1 லட்சத்துக்கு ஜவுளிகள் வாங்கினால் ரூ.10 ஆயிரம் திரும்பப் பெறும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநா்களின் உழைப்பை போற்றும் வகையில் 25 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரேமண்ட் பேண்ட், சட்டை இலவசமாக வழங்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com