வேன் கவிழ்ந்து பெண் பலி; 14 போ் காயம்
By DIN | Published On : 09th September 2022 11:46 PM | Last Updated : 09th September 2022 11:46 PM | அ+அ அ- |

ஊத்தங்கரை அருகே திருமணத்துக்குச் சென்றவா்களின் வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். மேலும், 14 போ் காயமடைந்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த சுன்னாலம்பட்டியை சோ்ந்தவா் ராமு (25). அதே பகுதியை சோ்ந்தவா் உஷாராணி (20) இருவருக்கும் தண்ணீா் பந்தல் அருகே உள்ள முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க இருந்தது. இதற்காக உறவினா்களுடன் அதிகாலை வேனில் சென்றனா். ஊத்தங்கரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்புக்காடு பகுதியில் டாரஸ் லாரியை முந்தி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் மல்லிப்பட்டியைச் சோ்ந்த சாந்தி (34) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த 14 போ் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.