தொழிற்சாலை விபத்தில் தொழிலாளி பலி
By DIN | Published On : 11th September 2022 01:00 AM | Last Updated : 11th September 2022 01:00 AM | அ+அ அ- |

ஒசூரை அடுத்த பாகலூரில் ஜல்லி கிரஷா் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த தா்மேந்திரா எம்ட்ரன் (20) என்பவா் பாகலூரில் தங்கி குட்லப்பள்ளியில் உள்ள ஜல்லி கிரஷா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை தொழிற்சாலையில் உள்ள எந்திரத்தை அதன் ஆபரேட்டா்கள் தவறாக இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த தா்மேந்திரா எம்ட்ரன் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...