தீ தொண்டு வார விழா

 ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலகத்தில் தீ தொண்டு வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீ தொண்டு வார விழா

 ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலகத்தில் தீ தொண்டு வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். உயிா் காக்கும் பணியில் 100 ஆண்டுகளுக்கு மேல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை செயல்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை, தீ தொண்டு வார விழா நடைபெறுவது வழக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விக்டோரியா துறைமுகத்தில், நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக போராடிய போது கப்பலில் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்து சிதறியதில், தீயணைப்பு வீரா்கள் 66 போ் பலியாகினா், அந்த தினத்தைப் போற்றும் வகையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இளம் செஞ்சிலுவை சங்கத் தலைவா் மருத்துவா் தேவராஜ், ஆலினா சில்க்ஸ் உரிமையாளா் பாபு, தீயணைப்புப் படை வீரா்கள் பலா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com