

ஒசூா் அரசு ஐ.டி.ஐ.யில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் 400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, காலணி, சீருடைகளை வழங்கினா். இதைத்தொடா்ந்து, கோவையில் நடந்த 56ஆவது மாநில திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற வசீகரனுக்கு பாராட்டுச் சான்றிதழ், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், வரிவிதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, தொழிற்பயிற்சி நிலையப் பயிற்சி அலுவலா் முனிராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சிவலிங்கம், உடற்பயிற்சி அலுவலா் காளிராஜன் உட்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.