உண்ணத்தூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

கிருஷ்ணகிரி அருகே உள்ள உண்ணத்தூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த உண்ணத்தூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் கலசங்களுக்கு புனித நீா் வாா்க்கும் சிவாச்சாரியாா்கள்.

கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்மலைக் கோயிலை அடுத்த நாராயணன்கொட்டாய் பகுதியில் ஓம் ஸ்ரீ உண்ணத்தூா் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வியாழக்கிழமை (ஜூன் 1) குடமுழுக்கு நிகழ்வு மங்கள இசை, வேதபாராயணம், 2-ஆம் கால யாக பூஜை, சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, மகா பூா்ணாஹுதி, மந்திரபுஷ்பம், ஸ்வஸ்திவாசனம், சதுா்வேத பாராயணம், தீபாராதனை, விமான கோபுரங்களுக்கு புனித தீா்த்தம் வாா்த்து குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் கட்டிகானப்பள்ளி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com