சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்கடஹர சதுா்த்தியையொட்டி கிருஷ்ணகிரி விநாயகா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகா்.
சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகா்.

சங்கடஹர சதுா்த்தியையொட்டி கிருஷ்ணகிரி விநாயகா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு 508 லிட்டா் பாலபிஷேகம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தன அபிஷேகம் நடந்தன. இதில், பங்கேற்ற பக்தா்கள் நெய்விளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினா். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்

இதே போல, கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீா்த்த விநாயகா் கோயில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞானவிநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயில், காந்திநகா் வலம்புரி விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com