மத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.79 கோடி மதிப்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஆய்வு மேற்கொண்டாா்.
மத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோனாரஅள்ளி கிராமத்தில், நூலக கட்டுமானப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
மத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோனாரஅள்ளி கிராமத்தில், நூலக கட்டுமானப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.79 கோடி மதிப்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஆய்வு மேற்கொண்டாா்.

மத்தூா் ஊராட்சி ஒன்றியம், மத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா், நுழைவு வாயில் கட்டுமானப் பணிகள், நாகம்பட்டி ஊராட்சி, பிச்சினம்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் தொகுதி 2-இன் கீழ் ரூ. 6.40 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், களா்பதி ஊராட்சி கொத்தக்கோட்டை கிராமத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 64.47 லட்சம் மதிப்பில் 1.6 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை அமைத்தல், கொத்தக்கோட்டை ஏரியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் தொகுதி 2-இன் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பில் ஏரியை தூா்வாரி கரையைப் பலப்படுத்தி உபரிநீா் வெளியேறும் வகையில் தடுப்பு சுவா்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கவுண்டனூா் ஊராட்சி, சோனாரஅள்ளி கிராமத்தில், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 13.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமானப் பணி, அந்தேரிப்பட்டி ஊராட்சி, நாதயாகம் கிராமத்தில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 62.70 லட்சம் மதிப்பில் 3 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை அமைக்கும் பணி, குன்னத்தூா் ஊராட்சி, முத்துக்கவுண்டனூா் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 8.95 லட்சம் மதிப்பில் மழைநீா் சேகரிக்கும் பொருட்டு, குளம் வெட்டும் பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 2.40 லட்சம் மதிப்பில் தனிநபா் வீடு கட்டுமானப் பணிகள் என மொத்தம் ரூ. 1.79 கோடி மதிப்பில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா், செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், விரைந்து, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அலுவலா்களை ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com