ஊத்தங்கரையில் விசிக கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th April 2023 02:16 AM | Last Updated : 17th April 2023 02:16 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையில் ஆணவ படுகொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
ஊத்தங்கரையில் ஆணவக் கொலையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தில் சனிக்கிழமை மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த சுபாஷ் (25), கொலையைத் தடுக்க முயன்ற அவரது பாட்டி கண்ணம்மாளை வெட்டி கொன்ற தண்டபாணியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்ட ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த படுகொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும், பாதிக்கப்பட்ட அனுசுயாவிற்கு, ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ஆணவக் கொலைகளை உடனடியாக விசாரிப்பதற்காக, தனி நீதிமன்றத்தை தமிழக அரசு நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு விசிக மாநில துணைச் செயலாளா் அசோகன் தலைமை வகித்தாா். குபேந்திரன், ஜெயலட்சுமி, துரைவளவன்,சரவணன் உள்பட 25 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.