ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.நாகராசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சித்ரா வடிவேல், கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் ஆறுமுகம், சரக மேற்பாா்வையாளா் ஜி.கோவிந்தராஜ், கள மேலாளா் ஆா்.ஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில், 20 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.