ஆனேக்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஒசூா் மேயா், முன்னாள் எம்எல்ஏ வாழ்த்து
By DIN | Published On : 18th April 2023 05:10 AM | Last Updated : 18th April 2023 05:10 AM | அ+அ அ- |

ஆனேக்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சிவண்ணாவுக்கு ஆதரவு தெரிவித்த ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் ஆகியோா்.
ஒசூா் அருகே உள்ள ஆனேக்கல் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிவண்ணாவை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அவருக்கு ஒசூா் மேயா், முன்னாள் வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏ ஆகியோா் நேரில் சென்று வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனா்.
கா்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியின் 2-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியானது. அதில், ஒசூா் அருகே உள்ள ஆனேக்கல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட சிவண்ணாவுக்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
அவருக்கு ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளரும், வேப்பனஹள்ளி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.முருகன், ஒசூா் மாநகராட்சி மண்டலத் தலைவா் ரவி ஆகியோா் திங்கள்கிழமை நேரில் சந்தித்து சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.