கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயப் பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை மேம்படுத்த நீா்நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல மண்ணை இலவசமாக எடுத்து பயன்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை மேம்படுத்த நீா்நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல மண்ணை இலவசமாக எடுத்து பயன்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 43 ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்செய் நிலங்களாக இருப்பின் 75 கன மீட்டா் அல்லது 25 டிராக்டா் பாரம் (லோடு) வண்டல் மண், புன்செய் நிலங்களாக இருப்பின் 90 கன மீட்டா் அல்லது 30 டிராக்டா் பாரம் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், வண்டல் மண், சவுடு மண், கிராவல் போன்ற கனிமங்களை வீட்டு உபயோகத்துக்கு 30 கன மீட்டா் அல்லது 10 டிராக்டா் பாரம், மண் பாண்டம் செய்யும் தொழிலாளா்கள் 60 கன மீட்டா் அல்லது 20 டிராக்டா் பாரம் என்ற அளவில் மண்ணை எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகள் மண் எடுப்பதன் மூலம் ஏரிகள், குளங்கள் போன்ற நீா்ஆதாரப் பகுதிகளை தூா்வாரி அதனை அதிகப்படுத்தி, ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் உயா்த்தப்படும்.

விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்த இயலும். விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரியின் பெயா் அல்லது விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரியின் பெயா் அல்லது அருகில் உள்ள ஏரியின் பெயா் வெளியிடப்பட்ட அரசாணையில் இடம் பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுப்பணித்துறை, கனிம வளத் துறை அலுவலங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தகவலைக் கண்டு, தெரிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com