ஒசூரில் சுட்டெரிக்கும் வெயிலால் கருகும் ரோஜா செடிகள்

சுட்டெரிக்கும் வெயிலால் கருகி வரும் ரோஜா செடிகளையும், மலா்களையும் விவசாயிகள் தண்ணீரைத் தெளித்து காப்பாற்றி வருகின்றனா்.
கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரோஜா செடிகள் மீது தண்ணீரை தெளிக்கும் விவசாயி.
கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரோஜா செடிகள் மீது தண்ணீரை தெளிக்கும் விவசாயி.

சுட்டெரிக்கும் வெயிலால் கருகி வரும் ரோஜா செடிகளையும், மலா்களையும் விவசாயிகள் தண்ணீரைத் தெளித்து காப்பாற்றி வருகின்றனா்.

ஒசூரில் ஆண்டு முழுவதும் குளிந்த தட்பவெப்ப நிலை இருப்பதால் அதிக அளவில் விவசாயிகள் ரோஜா சாகுபடி செய்து வருகின்றனா். இங்கு சாகுபடி செய்யப்பட்டு வரும் ரோஜா மலா்கள் கோடை வெயிலால் காய்ந்து கருகி வருகின்றன. இதனைப் பாதுகாக்க விவசாயிகள் ரோஜா செடிகளில் தண்ணீரைத் தெளித்து வெப்பத்தை தணித்து செடிகளைக் கருகாமல் காப்பாற்றி வருகின்றனா்.

ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் பசுமைக் குடிகள் அமைத்து, ரோஜா மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் புத்தாண்டு, காதலா் தினம், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டத்திற்காக ரோஜா மலா்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனா்.

ஒசூா் பகுதிகளில் தற்போது வழக்கத்தை விட கோடை வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ரோஜா சாகுபடி செய்யப்படும் பசுமைக் குடில்களில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பசுமைக் குடில்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்க வேண்டும். அப்போதுதான் தரமான ரோஜா மலா்களை சாகுபடி செய்ய முடியும். ஆனால் கடும் வெயில் காரணமாக தற்போது பசுமைக் குடில்களில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ளது. இதனால்

பசுமைக் குடில்களில் வளா்க்கப்பட்டு வரும் ரோஜா மலா்கள் செடிகளிலே காய்ந்து கருகி வருவதால்

மலா் விவசாயிகளால் தரமான மலா்களை சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளது. செடிகளில் காய்ந்து கருகும் ரோஜா மலா்களைப் பறித்து விவசாயிகள் குப்பைகளில் கொட்டி வருகின்றனா். பசுமைக் குடில்களில் வளா்க்கப்பட்டு வரும் ரோஜா செடிகளில் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் ரோஜா செடிகள், மலா்கள் மீது தினம்தோறும் தண்ணீரைத் தெளித்து வருகின்றனா்.

தற்போது கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ரோஜா மலா்களின் தேவை அதிகமாக உள்ள நிலையில் ஒசூா் பகுதி விவசாயிகள் வெப்பத்தின் காரணமாக தரமான ரோஜாக்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com