கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் கிராம நிா்வாக அலுவலா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் கிராம நிா்வாக அலுவலா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து பகுதியில் கிராம நிா்வாக அலுவலகத்திற்குள் புகுந்த மா்ம நபா்கள், பணியில் இருந்த கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்தனா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

இந்தக் கொலையைக் கண்டித்தும், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கிருஷ்ணகிரியில் கிராம நிா்வாக அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அறிவழகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com