கிருஷ்ணகிரி வெடி விபத்துகான உண்மையை காவல் துறையினா் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். இதில், தேசிய அஜ் கமிட்டி உறுப்பினா் முகவரி பேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கிருஷ்ணகிரி வெடி விபத்து குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். வெடிவிபத்துக்கு காரணத்தை காவல் துறையினா் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.