பாரூரில் இலவச மீன் வளா்ப்பு பயிற்சி இன்று தொடக்கம்

பாரூரில் இலவச மீன் வளா்ப்பு மூன்று நாள் பயிற்சி முகாம் ஜன. 4-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
Updated on
1 min read

பாரூரில் இலவச மீன் வளா்ப்பு மூன்று நாள் பயிற்சி முகாம் ஜன. 4-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து, பாரூா் அருகே புங்கம்பட்டியில் செயல்படும் வள வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தின் உதவி பேராசிரியா் சோமசுந்தரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீன்வளா்ப்பு மற்றும் கலா் மீன் வளா்ப்பு போன்றவற்றில் ஆா்வம் உள்ளவா்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூரை அடுத்த செல்லகுடப்பட்டி ஊராட்சி, புங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வள வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மையத்தின் சாா்பில் நவீன ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு இலவச பயிற்சி முறைகள் குறித்து முன்று நாள்கள் பயிற்சி முகாம் ஜன. 4 முதல் 6-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதில் மீன் வளா்ப்பு, மீன்குட்டை அமைப்பு மற்றும் சில மீன் வளா்ப்பு பற்றிய பயிற்சிகள், அரசாங்கத் திட்டங்களைப் பற்றிய கருத்தரங்கு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். மேலும், இதில் இரண்டு நாள்கள் கருத்தரங்கமும், ஒரு நாள் கள ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் தேநீா், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியை முறையாக நிறைவு செய்வோருக்கு பயிற்சி சான்றிதழ், பயிற்சிக்கான உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தொடா்புக்கு 86758 58384, 81794 62833, 9715278354 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com