ஒசூா் அருகே கனிம வளங்களுடன் சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் துரைசாமி தலைமையில் வாகனத் தணிக்கை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளபட்டது.
பாகலூா், அந்திவாடி உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டபோது, லாரிகளில் கூடுதல் சுமையுடன் கனிம வளங்களை கா்நாடக மாநிலத்துக்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடுதல் சுமையுடன் கனிம வளங்களை கொண்டு சென்ாக 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கனிம வளங்களை கொண்டு சென்ற வாகனங்களுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த வாகனத் தணிக்கையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் மணிமாறன், சோதனைச் சாவடி மோட்டாா் வாகன ஆய்வாளா் லியோ ஆண்டனி ஆகியோா் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.