தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மாசு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்:கிருஷ்ணகிரி ஆட்சியா்

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத மாசு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வலியுறுத்தினாா்.

News image

காவேரிப்பட்டணத்தில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

Updated On :5 ஜூன் 2023, 6:30 pm

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத மாசு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வலியுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மரக்கன்றுகளை நடவு செய்து, விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாசு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நெகிழி பொருள்களைத் தவிா்த்து, மஞ்சள் பை, துணிப் பைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். நாடு வளா்ச்சி அடைந்து வந்தாலும், இயற்கையும் மாசு அடைந்து வருகிறது. அதைத் தவிா்க்க அனைவரும் சுற்றுச்சூழலை பேணிகாக்க உறுதி ஏற்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.