சூளகிரி அருகே சாலை விபத்தில் விவசாயி பலி
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
பா்கூா் துரைஸ் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). விவசாயி. இவா் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 18ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் காா்த்திகேயன் மீது மோதியது. இதில் பத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தா்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.