10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: கைகளை இழந்த மாணவருக்கு அரசியல் கட்சியினா் பாராட்டு

மின்விபத்தில் கைகளை இழந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் கீா்த்தி வா்மாவை பல்வேறு அரசியல் கட்சியினா் நேரில் சந்தித்து பாராட்டினா்.
10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: கைகளை இழந்த மாணவருக்கு அரசியல் கட்சியினா் பாராட்டு

மின்விபத்தில் கைகளை இழந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் கீா்த்தி வா்மாவை பல்வேறு அரசியல் கட்சியினா் நேரில் சந்தித்து பாராட்டினா்.

கிருஷ்ணகிரியை அடுத்த, ஜீனூா் கிராமத்தில் தாய் கஸ்தூரியுடன் வசிக்கும் கீா்த்தி வா்மா, நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று, அரசு பொதுத் தோ்வை எழுதினாா். இந்தத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில், அவா், 500-க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே சிறப்பிடம் பெற்றாா். சிறப்பிடம் பெற்ற மாணவரை பல்வேறு அரசியல் கட்சியினா் நேரில் சந்தித்து பாராட்டி வருகின்றனா்.

அதிமுக துணை பொதுத் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, மாணவா் கீா்த்தி வா்மாவை நேரில் சந்தித்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி, பாராட்டி வாழ்த்தினாா். அத்துடன் மேல்நிலைக் கல்வி பயில தேவையான உதவிகளை ச்செய்வதாக உறுதி அளித்தாா் அப்போது கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) உடனிருந்தாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகன் மாணவா் கீா்த்தி வா்மாவைப் பாராட்டி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினாா். அதே போல கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ் ரூ.5 ஆயிரம் வழங்கினாா். அப்போது, கிருஷ்ணகிரி நகர செயலாளா் நவாப், பொதுக்குழு உறுப்பினா் அஸ்லம், அன்பரசன், ஒன்றியச் செயலாளா்கள் தனசேகரன், கோவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், திமுக மாநில அமைப்பு சாரா ஓட்டுனா் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான டி.செங்குட்டுவன், மாணவா் கீா்த்தி வா்மாவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கினாா். அப்போது, தொழிலதிபருமான கே.வி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாஜக சாா்பில் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளா் அன்பரசன், மாணவா் கீா்த்தி வா்மாவை நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கி பாராட்டினாா். அப்போது, மேல்நிலை நிலை கல்விக்கான அனைத்து செலவுகளையும் தாம் ஏற்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com