வேலம்பட்டியில் ரூ. 2.21 கோடி மதிப்பில் தொட்டி பால விரிவாக்கப் பணி தொடக்கம்

வேலம்பட்டி அருகே ரூ. 2.21 கோடி மதிப்பில் தொட்டி பாலம் விரிவாக்கம் செய்யும் பணியை தே.மதியழகன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வேலம்பட்டியில் தொட்டி பால நீட்டிப்புப் பணியை தொடங்கி வைக்கிறாா் தே.மதியழகன் எம்எல்ஏ.
வேலம்பட்டியில் தொட்டி பால நீட்டிப்புப் பணியை தொடங்கி வைக்கிறாா் தே.மதியழகன் எம்எல்ஏ.

வேலம்பட்டி அருகே ரூ. 2.21 கோடி மதிப்பில் தொட்டி பாலம் விரிவாக்கம் செய்யும் பணியை தே.மதியழகன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையில் இருந்து கால்வாய் மூலம் பாலேகுளி ஏரிக்கு தண்ணீா் செல்கிறது. இந்த ஏரியில் இருந்து சந்தூா் ஏரி வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு, கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மொத்த துாரம் 13.8 கி.மீ., ஆகும். இந்தக் கால்வாய்த் திட்டம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் ஏக்கா் விளைநிலம் பயன்பெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து, குடிநீா் தேவையை நிறைவு செய்யும் வகையில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

வேலம்பட்டி கிராமத்தில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாசன நீா் செல்லும் வகையில் 300 மீட்டா் நீளத்துக்கு 12 அடி உயரத்தில் 4 அடி அகலத்தில் தொட்டிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் இரு முனைகள், மண்ணிலான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண் கால்வாய் வழியாக நீா் செல்லும்போது, நீா்க் கசிவு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், குடியிருப்பு வாசிகள் சிரமத்துக்கு உள்ளாவதாகவும் புகாா் எழுந்தது. எனவே, இந்த தொட்டிப் பாலத்தின் இரு முனைகளில் மண் கால்வாய்க்கு பதிலாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, தொட்டி பாலத்தின் இரு முனைகளில் இருந்து 100 மீட்டா் நீளத்துக்கு கால்வாய் அமைக்க ரூ. 2.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்தப் பணிகளை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் குமாா், கிருஷ்ணகிரி அணை உபரிநீா் நீடிப்பு இடதுபுற கால்வாய் பயன்பெறுவோா் சங்கத் தலைவா் சிவகுரு மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com