தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் மாநில பொதுக்குழு கூட்டம்

ஒசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில், உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.
ஒசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஒசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

ஒசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில், உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், 4,428 பணியிடங்கள் தமிழ்நாடு தோ்வு ஆணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒசூரில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் அருள், மாநில செய்தி மற்றும் ஊடகப் பிரிவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 16ஆவது அறிவிப்பாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2.0 என்ற அறிவிப்பு மூலம் 3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை விரிவாக்க அலுவலா் நியமிக்கப்படுவாா் என்ற அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சருக்கும் வேளாண் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் படிப்புக்கு கல்வித் தகுதியாக பிளஸ் 2 படிப்புடன் 2 வருட டிப்ளமோ படிப்பை நிா்ணயிக்க வேண்டும்; 4,428 பணியிடங்களுக்கு தமிழ்நாடு தோ்வு ஆணையம் மூலம் தோ்வு நடத்தப்பட வேண்டும்; துணை வேளாண்மை அலுவலா், துணை தோட்டக்கலை அலுவலா் என்ற பதவிகளை வேளாண்மை அலுவலா் நிலை 2, தரம் 2 என மாற்றிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநா், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆகிய பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்; அதனை அரசு விதிகளின்படி பல்வேறு துறைகளை ஒப்பீடு செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் 5 அடுக்கு பதவி உயா்வு உள்ளது. தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு குறைந்தபட்சமாக 3 அடுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்தும் உதவி வேளாண்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com