மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 24th May 2023 12:56 AM | Last Updated : 24th May 2023 12:56 AM | அ+அ அ- |

ஒசூரில் மண் கடத்தியதாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒசூா் நகரப் போலீஸாா் ஒன்னல்வாடி, தொரப்பள்ளி சாலையில் ஜொனபண்டா அருகில் ரோந்து சென்ற போது, 3 டிப்பா் லாரிகளில் 11 யூனிட் மண் ஏற்றப்பட்டிருந்ததைக் கண்டனா். விசாரணையில், அனுமதியின்றி மண் கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஒசூா் நகர உதவி காவல் ஆய்வாளா் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் லாரிகளையும், மண்ணையும் பறிமுதல் செய்தனா்.
இதே போல, தளி, கொத்தனூா் அருகே ராட்சத கற்களை அனுமதியின்றி கொண்டு சென்ற லாரியையும், கற்களை ஏற்ற பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.