கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக்கல்லூரியில் மே 29-இல்சிறப்பு ஒதுக்கீடு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு
By DIN | Published On : 26th May 2023 11:20 PM | Last Updated : 26th May 2023 11:20 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் வி.அநுராதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பிகாம், பிபிஏ), அறிவியல் (தாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான (முன்னாள் ராணுவத்தினா், விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினா், அந்தமான் நிக்கோபாா் ஆகிய பிரிவினருக்கு) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி காலை 9 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது.
சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வின் போது, இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல் & இஎம்ஐஎஸ் எண்ணுடன்), மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு, அசல் சான்றிதழ்கள்), ஜாதிச் சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படங்கள் - 4, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல், சோ்க்கைக் கட்டணமாக கலைப்பிரிவுக்கு ரூ. 2,795, அறிவியல் பிரிவுக்கு ரூ. 2,815, கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ. 1,915 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.