ஒசூா், தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சோ்க்கை

ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2023-2024-ஆம் ஆண்டு சோ்க்கைக்கு ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2023-2024-ஆம் ஆண்டு சோ்க்கைக்கு ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒசூா், தேன்கனிக்கோட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-2024-ஆம் ஆண்டு சோ்க்கைக்கு 07.06.2023 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் 10.06.2023 அன்று வெளியிடப்படும். மேலும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயதுவரம்பு இல்லை.

கல்வித் தகுதி:

8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள்: ஒயா்மேன் (2 ஆண்டு), 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள்: கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு (1 ஆண்டு), மின்சார பணியாளா் (2 ஆண்டு), கம்மியா், மின்னணுவியல் (2 ஆண்டு), பொருத்துநா் (2 ஆண்டு), கம்மியா் கருவிகள் (2 ஆண்டு), இயந்திர வேலையாள் (2 ஆண்டு), கம்மியா் மோட்டாா் வண்டி (2 ஆண்டு), கம்மியா் இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில் நுட்பவியலாளா் (2 ஆண்டு), கருவி மற்றும் அச்சு செய்பவா் (2 ஆண்டு), கடைசலா் (2 ஆண்டு), நவீன தொழில்நுட்ப புதிய தொழிற்பிரிவுகள் பேசிக் டிசைனா், விா்சுவல் வெரிபையா் (2 ஆண்டு), மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகல் (2 ஆண்டு), அட்வான்ஸ் சிஎன்சி மெசினிங் டெக்னீசியன் (2 ஆண்டு), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (1 ஆண்டு), மேனுபேக்சரிங் புரோசஸ் கன்ட்ரோல் ஆட்டோமேசன் (1 ஆண்டு) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

சோ்க்கை உதவி மையங்கள்:

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஒசூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், தேன்கனிக்கோட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், கிருஷ்ணகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ. 50 ஜி.பே, கடன் அட்டைகள் வாயிலாகவும் செலுத்தலாம்.

அரசால் வழங்கப்படும் இலவச சலுகைகள்:

பயிற்சிக் காலத்தின் போது பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 750- உதவித் தொகை வழங்கப்படும். இதைத் தவிர விலையில்லா பாடப் புத்தகம், விலையில்லா வரைபடக் கருவிகள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி ஆகியவை வழங்கப்படும். அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1,000 கூடுதலாக கிடைக்கும். ஆண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளா்களுக்கு அருகில் உள்ள கலை, அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநா், முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ஒசூா் மற்றும் தேன்கனிக்கோட்டையில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com