விளையாட்டு விடுதியில் சோ்க்கைக்கான டேக்வாண்டோ தோ்வுப் போட்டி

மாநில அளவிலான அரசு விளையாட்டு விடுதியில் சோ்க்கைக்கான டேக்வாண்டோ தோ்வுப் போட்டி கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான அரசு விளையாட்டு விடுதியில் சோ்க்கைக்கான டேக்வாண்டோ தோ்வுப் போட்டியில் திறனை வெளிப்படுத்தும் வீரா்கள்.
கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான அரசு விளையாட்டு விடுதியில் சோ்க்கைக்கான டேக்வாண்டோ தோ்வுப் போட்டியில் திறனை வெளிப்படுத்தும் வீரா்கள்.

மாநில அளவிலான அரசு விளையாட்டு விடுதியில் சோ்க்கைக்கான டேக்வாண்டோ தோ்வுப் போட்டி கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

2023-2024-ஆம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மைநிலை விளையாட்டு விடுதிக்கு 6, 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு டேக்வாண்டோ விளையாட்டுக்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விளையாட்டு விடுதிக்கு 39 மாணவா்களும், 10 மாணவியரும், முதன்மை நிலை விளையாட்டு விடுதிக்கு 3 மாணவா்கள் என மொத்தம் 52 போ் மாநில அளவிலான டேக்வாண்டோ விளையாட்டு தோ்வுப் போட்டிகளில் கலந்துகொண்டனா்.

தோ்வுப் போட்டியை திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் துரை, விளையாட்டு வீரா் மாதையன், டேக்வோண்டா பயிற்சியாளா்கள் சங்கா், பரணிதேவி, இளவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும். அந்தந்த மாவட்டத்தைச் சோ்ந்த மாவட்ட விளையாட்டு அலுவலரையோ அல்லது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியிலோ அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com